உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு : ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது கெமரா தாக்குதல்!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
73 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்துவிட்டு வெளியேறியபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியொருவர் ஊடகவியலாளர் ஒருவரினால் கெமராவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது பணியை மேற்கொண்டுகொண்டிருந்தபோது, முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கி வந்த அதிகாரியின் தலையில் கெமராவால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரியின் பணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகவியலாளர் நடந்துக்கொண்டதாகவும் , இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அதிகாரி கொம்பனித்தெரு காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான காணொளி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0