உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட்டமடு விவசாயிகளுக்கு இனப் பாகுபாடு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
126 பார்வைகள்

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் திட்டமிட்ட வகையில் அனுமதி மறுத்து, இன ரீதியான பாகுபாட்டை செயல்படுத்துவதாகக் குற்றம் சுமத்தி, கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வட்டமடு விவசாயிகள் சம்மேளனத்தினால் விசேட முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாகத் தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த காணிகள், விவசாயிகளாகிய தமக்குத் தெரியப்படுத்தப்படாமல் கடந்த 2010 ஆம் ஆண்டு வன பாதுகாப்பு திணைக்களத்தினால் வர்த்தமானி (Gazette) மூலம் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விவசாயிகள்,
“2015 ஆம் ஆண்டு பெரும்போகம் வரை நாங்கள் இக் காணிகளில் விவசாயம் செய்து வந்தோம். அதன் பின்னர் விவசாய ஆரம்பக் கூட்டங்களை நடத்துவதற்கும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் திருக்கோவில் பிரதேச செயலாளர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றார். இக் காணிகள் பக்குமட்டியா வனப்பகுதிக்குள் அடங்குவதாகக் காரணம் கூறப்படுகின்றது” எனத் தெரிவித்தனர்.

“இருப்பினும், அதே பக்குமட்டியா மற்றும் திம்பிரிக்கொள்ள வன எல்லைக்குள் அமைந்துள்ள சாகாமம், பெரியதிலாவ, முரானபட்டி, பொத்தான, பழையவட்ட, கொக்குளுவ, டிப்போமடு மற்றும் கஞ்சுடிச்சாறு போன்ற ஏனைய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு, வேளாண்மை செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. அப் பகுதிகளில் 100 வீதம் தமிழ் விவசாயிகள் உள்ளதால் அவர்களுக்கு அனுமதி வழங்கும் பிரதேச செயலாளர், 95 வீதம் முஸ்லிம் விவசாயிகள் நிலத்தைக் கொண்டுள்ள வட்டமடு பிரதேசத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கின்றார். இது ஒரு தெளிவான இனவாதச் செயற்பாடாகும்” என்றும் அவர்கள் சாடினர்.

இப் பிரதேசத்தில் வாழும் ஏழை விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கும் இக் காணிகளில் மீண்டும் சுதந்திரமாகச் சென்று விவசாயம் செய்ய அரசு மற்றும் அனைத்துத் தரப்பினரும் நீதி பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.

அதேவேளை, “ஒரே பிரதேச செயலகப் பிரிவில் ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்களில் ஒரு சாராரை நீதியாகவும், மறுசாராரை பாரபட்சமாகவும் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் 2026/2027 பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக ஏனைய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று, வட்டமடு விவசாயிகளுக்கும் விவசாய ஆரம்ப கூட்டங்களை நடத்தி வேளாண்மை செய்ய உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளரும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பொறுப்பு கூற வேண்டும்” என விவசாயிகள் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டம்.!

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

43 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 48…

47 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக.!

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்…

57 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிப்பு.!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டிலும் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற…

68 0 0