உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
75 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பில் இன்று (30) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், இனம், மதம், மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களாக ஒன்றிணைந்து அனோஜனின் விடுதலைக்காக குரல்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் அனோஜனின் பெற்றோரைச் சந்தித்து, அவரைப் பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், அந்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலேயே பொதுமக்கள் தளத்தில் இந்த மனிதாபிமான குரல் எழுப்பப்படுவதாகத் தெரிவித்தனர்.

சவூதி அரேபிய நாட்டின் சட்ட அமைப்பை மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான சவூதி மன்னரிடமும் அந்நாட்டு தலைமையிடமும் மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டி பொதுமன்னிப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டனர்.

அதேவேளை, நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள், மத ஸ்தாபனங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அமைதியான முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம், பிரார்த்தனைகள் மற்றும் கையெழுத்து வேட்டைகளில் ஈடுபட்டு இந்த மனிதாபிமான முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அமைதியான உணவு தவிர்ப்புப் போராட்டமானது எந்தவொரு நாட்டிற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல என்பதையும், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அமைப்பாளர்கள் வலியுறுத்தினர்.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் ஹரி கதிர்காமர், செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ பாஸ்கரன் மற்றும் சபரிமலை குருசுவாமி ரவி குருசாமி, ஆகியோர் இங்கு உரையாற்றியதோடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய பிரதம குரு விஜயானந்த் குருசாமி உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0