உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய மட்ட மாணவ தூதுவர் மாநாடு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
137 பார்வைகள்

மாணவ தூதுவர் குழுக்களுக்கான தேசிய மட்ட மாணவ தூதுவர் மாநாடு முதல் தடவையாக நேற்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்து மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்ற பாடசாலைகளின் மாணவ தூதுவர் குழுவினர் பொறுப்பாசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகிய ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது .

தேசிய ரீதியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ தூதுவர் குழுக்களின் பொறுப்பாசிரியர்களும் மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்திக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளும் பதக்கங்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வகையில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தின் முதலாம் இடத்தை தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவ தூதுவர் குழு பெற்றுக் கொண்டது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 15 செயற்பாடுகளை பாடசாலை மட்டத்தில் சிறப்பாக முன்னெடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை தெளிவூட்டல் செய்ததாலேயே முதலாம் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பு பாரதி மகா வித்யாலயா அன்னைக்கு கிடைத்தது.

குறித்த பாடசாலையில் மாணவர் தூதுவர் குழுவில் எடிசன் கவிசாந்த், பவிஷான் சங்கீதா லிஷாந்திகா நதீஷன் ஆகியோர் இருந்து செய்யப்பட்டனர் .

நடைபெற்ற தேசிய மாநாட்டில் பாரதி மகா வித்யாலயா மாணவர் குழுவின் அங்கத்தவர் கவிஷாந்த் மற்றும் உதவி சிரேஷ்ட மாணவ தலைவி புனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பாடசாலையின் அதிபர் திரு பெரியநாயகம், ஒழுங்காற்றுக் குழு செயலாளர் மாணவர் தூதுவர் குழுவின் பொறுப்பாசிரியருமான திரு சுஜித் சுரேன், நுவரெலியா மாவட்ட சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பதிகாரி திரு ஹரேன்திரன், மாவட்ட செயலகத்தின் சார்பில் உளவியல் பிரிவிற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றும் திருமதி நிரோஷா ஆகியோரம் கலந்து கொண்டனர்.

பாரதி மகா வித்தியாலய மாணவ தூதுவர் குழுவின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பாடசாலையின் நிர்வாகம் மற்றும் குழுவின் தூதுவர்களை வழிப்படுத்தி செயற்படுத்திய ஆசிரியர்களான திருமதி கமலேஸ்வரி, திருமதி கோகிலவாணி ஆகியோரும் பங்காளிகள்.

ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் மாணவர் தலைவர்களில் இருந்து மாணவ தூதுவர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

42 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

52 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

50 0 0