பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது.!
பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது கார் ஒன்றில் வந்த குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு முன்னெடுத்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் குற்றத்திற்குப் உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு ஹல்பாதோட்ட பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.
அவரிடமிருந்து 06 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரை பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பத்தேகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.