ILT20 வீரர் ஏலத்தில் இலங்கை வீரர்களும் உள்ளடக்கம்
துபாயில் நாளை (01) நடைபெறவுள்ள ‘DP World ILT20’ தொடரின் 5ஆவது பருவகாலத்திற்கான வீரர்கள் ஏலப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா உள்ளிட்ட இலங்கை வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்தில் வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் 80,000 அமெரிக்க டொலர் அடிப்படை விலைப் பிரிவிலும், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் 40,000 அமெரிக்க டொலர் அடிப்படை விலைப் பிரிவிலும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
23 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றும் இந்த ஏலத்தில், போட்டித் தொடரிலுள்ள 6 அணிகளும் தலா குறைந்தபட்சம் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வீரர்களைக் கொள்முதல் செய்வதற்காகப் பயன்படுத்தவுள்ளன.
இந்தத்தொடரின் 5ஆவது பருவகாலப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.