உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசின் சர்வாதிகார செயற்பாடுகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் ‘மொட்டு’ முறையீடு.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
78 பார்வைகள்

ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் சர்வாதிகார செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் ஒத்துழைப்புடன் அரசு அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்கின்றது. அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே கைதுகள் இடம்பெறுகின்றன.

ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைகள் குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடத் தீர்மானித்தோம். இதற்கமைவாகவே நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதுடன், எதிர்வரும் நாட்களில் ஏனைய இராஜதந்திரிகளையும் சந்திக்கவுள்ளோம்.

ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை. நாம் நாட்டுக்காகத் தனித்தே செயற்படுவோம். பிரதான எதிர்க்கட்சியானது அரசின் தற்போதைய கைதுகளுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

பேச்சுரிமை மற்றும் அரசியல் உரிமைக்காகவே நாங்கள் போராடுகின்றோம். எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைப்பதால் மாத்திரம் அரசுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்துவிடாது. அரசின் சர்வாதிகாரச் செயற்பாட்டுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0