உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

22ஆவது திருத்தத்துக்கு முடிவு கட்டும் அதிகாரம் எதிர்கால அரசுக்கு உண்டு.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
103 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தமானது நாட்டின் ஜனநாயக கலாச்சாரத்துக்கும், மக்கள் உரிமைகளுக்கும் முற்றிலும் முரணானது என்றும், அதனால் அந்தத் திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கான பூரண அதிகாரம் எதிர்கால அரசுக்கு உண்டு என்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டுக் எதிர்க்கட்சி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நமது அரசமைப்பின் கீழ் நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளதுடன், நாடாளுமன்றம் அந்த அதிகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாகவே செயற்படுத்துகின்றது. இலங்கையின் அரசமைப்பில், இறைமை மக்களிடமே உள்ளது என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு சட்டத்தையும் விவாதித்து நிறைவேற்றுவதற்கு மாத்திரம் நாடாளுமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்களின் நேரடி அனுமதி (சர்வஜன வாக்கெடுப்பு) பெறுவது அவசியமாகும்.

சட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின்படி, எந்தவொரு நாடாளுமன்றத்தாலும் எதிர்கால நாடாளுமன்றங்களின் கைகளைக் கட்டிப்போட முடியாது. தற்போதைய நாடாளுமன்றம் என்னதான் செய்தாலும், அவற்றை முழுமையாக நிராகரிப்பதற்கான அதிகாரம் எதிர்கால நாடாளுமன்றத்துக்கு உண்டு.

மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இறைமையை மீண்டும் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான அதிகாரம் எதிர்கால நாடாளுமன்றத்துக்கு இருப்பதுடன், இன்னும் மூன்று ஆண்டுகளில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத்துக்கு 22ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான உரிமையும் பொறுப்பும் கடமையும் உண்டு.

இதுபோன்ற விடயங்கள் குறித்துத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடம் இருக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும். அந்த அதிகாரத்தை ஒரு சிறப்பு நீதிமன்றமான ‘அரசமைப்பு நீதிமன்றத்துக்கு’ வழங்க வேண்டும்.

1972 ஆம் ஆண்டு அரசமைப்பின் கீழ் அத்தகையதொரு அமைப்பு இருந்தது. அந்தத் துறையில் விசேட நிபுணத்துவம் கொண்ட நீதிபதிகள் தனித்துவமாகத் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். எனவே, புதியதொரு முழுமையான அரசமைப்பைத் தயாரிக்கும்போது இத்தகையதொரு நீதிமன்றத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0