உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
110 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய அரசியல் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பின் போது, சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவர் எதிர்கொண்டுள்ள சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் அவரது குடும்பத்தினருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக இதுவரை பல்வேறு தூதரக மற்றும் அரச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முயற்சிகள் குறித்தும் இதன்போது குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அனோஜன் மிக விரைவில் விடுதலையாகித் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்காக, சாத்தியமான அனைத்து சட்ட ரீதியான மற்றும் அரசாங்க மட்டத்திலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாகப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மேலும், அவரது விடுதலைக்காக உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ் இக்கட்டான சூழ்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ஆறுதலையும் வழங்கி, அவர் விடுதலையாகும் வரை தொடர்ந்து பாடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0