உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கலாகக் கூறவே கூடாது.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
115 பார்வைகள்

ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பாரதூரமான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடக்கூடாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தற்போதைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு அரசாட்சியின் அனைத்துச் செயற்பாடுகளையும் தவறு என்று விமர்சிக்கக் கூடாது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்குக் கடந்த அரசு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டது. ஆகவே, ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கும் உண்டு. அரசியல் பிரபல்யத்துக்காக அந்த நிபந்தனைகளில் இருந்து எவராலும் விடுபட முடியாது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பசில் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப் பல ஊழல் வழக்குகள் காணப்படுகின்றன. இவர்கள் தமக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளைச் சட்டத்தின் முன் எதிர்கொண்டு தீர்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை நாட்டு மக்களுக்குச் சேர்ப்பித்தல் என்பவற்றிலும் அரசு தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0