உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய பிடியாணை!

113 பார்வைகள்

குழந்தை ஒன்றின் தந்தை தான்தான் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நிலையில், குறித்த குழந்தையின் பராமரிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினால், கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேற்படி வழக்கு திங்கட்கிழமை (28) கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாமிக கருணாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இருப்பினும், சாமிக கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய கடமையில் ஈடுபடுவதற்காக ஜப்பானில் தங்கியுள்ளார்.

வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தேசிய கடமை காரணமாகவே அவர் ஆஜராகவில்லை என்பது நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படவில்லை.

ஆகையால் அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த குழந்தைக்குரிய பராமரிப்புக்கான பணத்தை அறவிட்டுத் தருமாறு கோரியே இந்த நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அக்குழந்தையின் பராமரிப்புக்கு தேவையான பணத்தை செலுத்துமாறு சாமிக கருணாரத்னவிற்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த குழந்தையின் தந்தை தான் என்பதை சாமிக கருணாரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள் அமுல்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.துடுப்பாட்டவீரர்கள் ஆட்ட நேரத்தை தேவையின்றி வீணடித்தால் கடுமையான நடவடிக்கைகள்…

72 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஷிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறவுள்ள இந்தத்…

75 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் போட்டி தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய…

98 0 0