உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சட@லம் மீட்பு!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
81 பார்வைகள்

இன்று காலை நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த நபரின் உடல் ஒன்று கிடப்பதாக அப் பகுதியில் உள்ள மக்கள் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது இரண்டு கற்களுக்கு இடையே ஆண் ஒருவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு இப் பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தனர்.

கடந்த 22 ம் திகதி மஸ்கெலியா மவுஸ்சாகலை தோட்டத்தில் வசித்து வந்த மருதவீரன் சபாபதி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போய் உள்ளதாக அவரது சகோதரர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இந்த இறந்த நிலையில் உள்ளவர் மருதவீரன் சபாபதியாக இருக்குமோ என அடையாளம் காண அவரது சகோதரருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற அந்நபர் இறந்தது அது தனது தம்பி மருதவீரன் சபாபதி என அடையாளம் கண்டுகொண்டார்.

இன்நிலையில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்வையிட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க படும் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

49 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

29 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

62 0 0