உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிள்ளைகளின் பாசத்தைத் தேடி மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய தந்தையர்களின் கூட்டமைப்பு

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
102 பார்வைகள்

விவாகரத்து அல்லது ஏனைய குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகப் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் பராமரிப்புப் பணத்தைச் செலுத்துமாறு தந்தையர்களுக்கு உத்தரவிடப்படுகின்றது.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவின் பிரகாரமே அந்தப் பிள்ளைகளைப் பார்ப்பதற்கும் அவர்களுடன் சிறிது நேரத்தைச் செலவழிப்பதற்குமான சந்தர்ப்பமும் தந்தையர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த தந்தையர்களின் கூட்டமைப்பினர், ஆணைக்குழுவின் வளாகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பின்னர் தாம் பராமரிப்புப் பணத்தை உரிய நேரத்தில் தவறாமல் செலுத்திய போதிலும், பிள்ளைகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதில் தமக்குக் கடுமையான அநீதி இழைக்கப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தையர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்கும் தந்தையருக்குமிடையிலான பாசப் பிணைப்பு அதிகரித்தால், எதிர்காலத்தில் பராமரிப்புப் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற தவறான அச்சம் தாய்மார்களுக்கு இருப்பதாலேயே இவ்வாறு தங்களைத் தடுப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், பிள்ளைகளைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் தங்கள் மீது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பொலிஸில் முறைப்பாடு செய்து பிள்ளைகளைத் தம்மிடமிருந்து தூரமாக்கச் சிலர் செயற்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

தமது அமைப்பில் பெருமளவிலான தந்தையர்கள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், சமூகத்திற்கு முன்னால் வந்து தங்களது முகத்தைக் காட்டுவதற்குப் பலர் தயங்குவதாகவும், இன்று சுமார் 20 பேர் வரை இணைந்து இந்த முறைப்பாட்டை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் பராமரிப்புப் பணத்தை உரிய நேரத்தில் செலுத்தியும் எங்களுக்குப் பிள்ளைகளின் பாசம் மறுக்கப்படுகின்றது, பிள்ளைகள் எம்முடன் நெருங்கிவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே எங்களை அவர்களிடம் செல்லவிடாமல் பிரிக்கிறார்கள் எனப் பாதிக்கப்பட்ட தந்தையர்கள் ஊடகங்கள் வாயிலாகத் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

49 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

29 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

62 0 0