உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பெரிதும் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
95 பார்வைகள்

பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று பிற்பகல் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூர் இழுவைப் படகினால் கடல் வளம் அழிக்கப்படுகின்றமை, கடல் அட்டை வளர்ப்பினால் சிறு மீனவர்கள் பாதிப்பு உட்பட பல்வேறு விடயங்களை வடக்கு மீனவர்கள் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து முறையீடு செய்ததாகவும், நாங்கள் கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பாக அவரிடம் தெரிவித்தபோது அவர் உள்ளூர் இழுவைமடி படகுகள் இறால் பிடி தொழிலில் ஈடுபாடுவதாக தெரிவித்திருக்கின்றார்.

நாங்கள் கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பில் பேசும் போது அவர் கடல் வளத்தை அழிக்கின்ற தொழிலை ஆதரிப்பதாகவும், தென்பகுதியில் வத்தள குண்டு பகுதியில் உள்ளூர் இழுவை மடி படகு தொழிலை தடை செய்த பின்னர் அவர்கள் குறைந்த மண்ணெண்ணெய் செலவில் அதிகமான வருவாயை ஈட்டி வருவதாகவும், அதே போன்று வடக்கிலும் உள்ளூர் இழுவை மடி படகினை உரியவர்கள் தடை செய்ய வேண்டும் என்றும், மணல்காடு முதல் முல்லைத்தீவு நாயாறு வரை வலை பாவித்துத்தான் இறால் பிடியில் ஈடுபடுகின்றனர் என்றும், கடல் அட்டை வளர்ப்பு பண்ணை பல ஏக்கர் கணக்கில் ஐயர், மருத்துவர், பொறியியலாளர்கள் போன்ற பெரும் முதலாளிகள் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்பட்டு சிறு மீனவர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று கடலில் உள்ளூர் இழுவை மடி படகுகளாலும் இவ்வாறு மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் தாம் உயர்மட்ட சந்திப்பு ஒன்றினை கொழும்பில் நடாத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், மண்ணெண்ணெய் மானியம் வழங்கலில் மீனவர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பாளரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

0 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0