உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீன் விற்பனையில் மோசடி; எடையை அதிகரிக்க மணல் கலப்படம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
143 பார்வைகள்

சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்குறித்த செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருவதுடன் குறித்த மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீன்களின் செதில்கள், வாய் மற்றும் செவுள்களுக்குள் (Gills) நுண் மணல் அல்லது மணல் தூள்களைப் புகுத்துவதன் மூலம் மீனின் நிகர எடை செயற்கையாக அதிகமாக்கப்படுகிறது.

இதன் மூலம் நுகர்வோர் குறைந்த அளவு மீனுக்கு அதிக பணம் செலுத்தி ஏமாற்றப்படுகின்றனர். அத்துடன் நாள்பட்ட மீன்களின் வழுவழுப்புத் தன்மையையும், அவை அழுகும் போது ஏற்படும் வெளிப்புற மாற்றங்களையும் மறைத்து, புதிய மீன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இத்தகைய ஏமாற்று வேலைகளில் சில வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சந்தைகளில் மீன் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என்றும், இவ்வாறான மணல் கலப்பட அல்லது ஏமாற்று வியாபாரங்களில் ஈடுபடும் வர்த்தகர்கள் பற்றி அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்திற்கோ அல்லது நுகர்வோர் அதிகாரசபைக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் புதிய மீன்களின் செவுள்கள் அடர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். செவுள்களுக்குள் மணலோ, சேறோ அல்லது கறை படிந்த திரவங்களோ அடைபட்டிருக்கக் கூடாது. மீனின் கண்கள் தெளிவாக, பிரகாசமாக மற்றும் வெளிப்புறமாக உப்பிக் காணப்பட வேண்டும். கண்கள் குழிவிழுந்தோ, மங்கியோ அல்லது இரத்தக் கறைகளுடன் காணப்பட்டால் அது பழைய மீனாகும். மீனின் உடற்பகுதியை விரலால் அழுத்தினால் அது உடனே மீண்டும் பழைய நிலைக்கு மீள வேண்டும். அழுத்தும் போது குழி விழுந்து, சதைப்பகுதி மென்மையாக இருந்தால் அது கெட்டுப்போன மீன் ஆகும். புதிய மீனில் கடலோரத்தின் இயல்பான உவர் வாசனை மட்டுமே வீச வேண்டும். துர்நாற்றமோ அல்லது மீனைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் அபாயகரமான ‘ஃபார்மலின்’ (Formalin) போன்ற இரசாயன வாசனையோ வீசக்கூடாது என உரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0