உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய ‘Sri Lanka AI Week 2026’ கொழும்பில் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
67 பார்வைகள்

இலங்கையின் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் SLT-MOBITEL நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘Sri Lanka AI Week 2026’ நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

‘AI Amplified’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வார நிகழ்வுகள், செயற்கை நுண்ணறிவு தொடர்பான நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதுடன், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.

இம்முறை AI Leaders Night, AI Conference, AI Expo மற்றும் National AI Awards என நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka AI Week 2026, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இதன் முக்கிய நிகழ்வுகளான AI Conference மற்றும் AI Expo ஆகியவை செப்டம்பர் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் கொழும்பு Monarch Imperial வளாகத்தில் நடைபெறுகின்றன.

இரண்டு நாட்கள் நடைபெறும் AI Conference-இல் 16 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்கள் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பான கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். அதேவேளை, AI Expo-வில் 35-க்கும் மேற்பட்ட முன்னணி கண்காட்சி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இதில் Huawei, ZTE, Sampath Bank, Snowflake, edotco, Connex மற்றும் NCINGA உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக, செயற்கை நுண்ணறிவின் நடைமுறைப் பயன்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த AI Expo கண்காட்சி செப்டம்பர் 30ஆம் திகதி காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொழும்பு Monarch Imperialஇல் பொதுமக்களின் பார்வைக்காகவும் திறக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவின் புதிய கண்டுபிடிப்புகளையும், இலங்கை மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.

நிகழ்வின் தொடக்க விழாவில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பிரதமர் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத், SLT குழுமத் தலைவர் கலாநிதி மொட்டிலால் டி சில்வா மற்றும் SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய AI Expo & Conference-இன் வெற்றியைத் தொடர்ந்து, இம்முறை மேலும் விரிவான தேசிய நிகழ்வாக இது முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் செயற்கை நுண்ணறிவு வகிக்கும் முக்கிய பங்கை முன்னிறுத்துவதுடன், AI தொடர்பான தேசிய இலக்குகளை நடைமுறைச் சாதனைகளாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

‘Sri Lanka AI Week 2026’ என்பது வெறுமனே ஒரு தொழில்நுட்ப நிகழ்வாக மட்டுமன்றி, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசாங்கம், தொழில்துறை, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு தேசிய முயற்சியாக முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0