உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தம்பிலுவிலில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
85 பார்வைகள்

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நடைபெறவுள்ள Capital Metals Cricket Cup கிரிக்கெட் தொடர், இலங்கை இராணுவத்தின் 242ஆவது காலாட்படைப் பிரிகேட் மற்றும் தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

இதன்படி, போட்டிகள் ஒக்டோபர் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் தம்பிலுவில் எதிரொலி கிரிக்கெட் மைதானம் மற்றும் தம்பிலுவில் மத்திய கல்லூரி மைதானம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன.

தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான அரவிந்த டி சில்வா அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை இந்தத் தொடரின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.3,000 பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடரின் சாம்பியன் அணிக்கு கிண்ணத்துடன் ரூ.400,000 பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் ரூ.300,000 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா ரூ.100,000 வழங்கப்படவுள்ளது.

மேலும், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோருக்கு தலா கிண்ணத்துடன் ரூ.50,000 பணப்பரிசும், தொடரின் சிறந்த வீரருக்கு கிண்ணத்துடன் ரூ.75,000 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவித்தல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தல் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்தல் ஆகிய நோக்கங்களுடன் நடைபெறும் இந்தத் தொடர், தம்பிலுவில் பிரதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான விளையாட்டு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி பதிவுகளுக்கு: 075 969 5305 – மயூரன்

மேலதிக தகவல்களுக்கு:
070 472 9833 – ஹர்ஷா
075 767 3145 – உஷாந்த்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

45 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

44 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

51 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

55 0 0