உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
108 பார்வைகள்

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) ஸ்தாபிப்பதற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயவிக்ரம அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (28) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் இத் திட்ட முன்மொழிவு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அஞ்சல் அத்தியட்சகரும் சிலோன் மீடியா போரத்தின் ஆலோசகருமான யூ.எல்.எம். பைசர் உடனிருந்தார்.

இச் சந்திப்பின் போது, நாட்டின் மூவின ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” என்பதன் நோக்கம், செயற்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்தும் அரசாங்க அதிபருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

45 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

44 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

51 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

55 0 0