உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
107 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அறுகம்பை – சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று(28) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுகம்பை மற்றும் சின்ன உள்ளை ஆகிய பகுதிகள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குவதோடு, தினசரி ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

இத்தகைய மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு மற்றும் சுற்றுலா மண்டலங்களுக்குள் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளின் வருகையும் நடமாட்டமும் அதிகரித்துள்ளமையினால் அப்பகுதியில் பெரும் அச்சநிலை நிலவுகின்றது.

எனவே, அறுகம்பை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாக தலையிட்டு, குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்தத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

45 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

44 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

51 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

55 0 0