உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சிக்கிய இளைஞன்.!
தெமட்டகொட, சிறிதம்ம மாவத்தையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 கைத்துப்பாக்கிகளுடன் (T-Kata) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தெமட்டகொட சமிந்தவின் மகன் மலிஷவுக்கு சொந்தமானது என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.