உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
117 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கு தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (29) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரூபா 100 மில்லியன் நிதி முறைகேடு மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கிலேயே கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு கொம்பனித்தெரு ‘கிரிஷ்’ நிலக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் 4 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இன்றையதினம் காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

44 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

44 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

50 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

55 0 0