உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த நாட்டுக்கு எதிராக செயற்படும் எதேச்சதிகார அரசுக்கு எதிர்காலத்தில் கடுமையான விளைவுகள் கிடைக்கும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
125 பார்வைகள்

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் தமது மனதில் பதித்துக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும், இந்த பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எதேச்சதிகார அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் அதன் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும் எனவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி மதுர விதானகே சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை மக்களோ, எதிர்க்கட்சிகளோ, குறைந்தபட்சம் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் அல்லது சட்டத்தரணிகள்கூடக் கோரவில்லை. அவ்வாறு எவராலும் கோரப்படாத ஒரு திருத்தத்தையே அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

திசைகாட்டியின் கொள்கைப் பிரகடனத்தில் கூட குறிப்பிடப்படாத விடயங்கள் இந்தத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்னர் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் மக்கள் வாக்களித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிராகச் செயற்படுவதற்காக அல்ல.

ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சிய தக்கவைத்துக்கொள்ள முயன்றது போன்றோ அல்லது பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி அதிகாரம் போன்றோ இலங்கையில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அதற்கான எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.

ஆளும் தரப்பில் சில பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் இறுதியில் அனைவரும் வாக்களித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்காகவும் குரல் கொடுத்ததாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்களும் இந்த விடயத்தில் தமது மனச்சாட்சிக்கு எதிராகச் செயற்பட்டுள்ளனர்.

பல்வேறு காலகட்டங்களில் பிரபாகரன் உள்ளிட்டவர்களும், 1505ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் என பலரும் இந்த நாட்டை அழிக்க முயன்றனர்.

எனினும், இந்த பௌத்த நாட்டுக்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது. அதற்கு இந்த நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எதேச்சதிகார அரசுக்கும் அதன் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும்.

இத்தகைய எந்தவொரு ஆட்சியாளரும் தொடர்ந்தும் யதார்த்தமான முறையில் ஆட்சி நடத்தியதில்லை என்பதால், இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0