உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிராம அலுவலரை இளங்குமரன் எம்.பி. தாக்கிய வழக்கு ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
112 பார்வைகள்

கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் டித்வா புயல் வீசிய சமயம் கிளிநொச்சியில் புயல் நிவாரணப் பணிகளின் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தாக்கினார் என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள வழக்கில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கிளிநொச்சி நீதிவான் கிருஷாந்தன் மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கினார்.

கடமையிலிருந்த கிராம சேவையாளரைத் தாக்கியமை தொடர்பான விவகாரம் கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு, மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. எனினும், பின்னர் அவர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிரான வழக்கு கடந்த ஜனவரி 20 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கு விசாரணைகளை முடித்து, குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாயின் அதற்காக சுமார் 8 மாத காலம் கால அவகாசம் வழங்கி வழக்கை நேற்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

வழக்கு நேற்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையான பொலிஸார் வழக்குத் தொடர்பான நிலைப்பாடு எதையும் தெரிவிக்காமல் இருந்த சூழ்நிலையில், விவகாரத்தை ஒட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை மன்றுக்கு வருமாறு அழைத்து, வழக்கை நேற்று நண்பகல் 1:30 வரை நீதிவான் ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த விடயத்தில் மேலதிக விசாரணைகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்குமாறு பொலிஸ் தரப்பில் கோரப்பட்டது.

விசாரணையை முடித்து இந்த விடயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாயின், அதனை அடுத்த தவணைக்குள் செய்யுமாறு வெளிப்படுத்திய நீதிவான் வழக்கை ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் சார்பில் நேற்றைய வழக்கின் காலை மற்றும் மதிய அமர்வுகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி சமர்ப்பணங்களைச் செய்திருந்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் மன்றில் முன்னிலையானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

31 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

50 0 0