உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

22ஆவது திருத்தத்தை மாற்றுவது நீதித்துறையைச் சுருக்குவதாகும்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
112 பார்வைகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகாரத்துக்கு வந்தால் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை மீள மாற்றுவதாகத் தெரிவித்துள்ளமை அவரது குறுகிய சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் நாடாளுமன்றத்தில் மிகவும் முக்கியமானவராவார். எனினும், அவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர் 22ஆவது திருத்தச் சட்டத்தை மீள மாற்றுவதாகக் கூறுவது தொடர்பில் நாட்டு மக்கள் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு மாற்றுவதென்பது உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா? அல்லது நீதிமன்றங்களின் கட்டமைப்பை மீண்டும் சுருக்குவதா? ஒரு நாட்டின் நீதித்துறை கட்டமைப்பைச் சுருக்குவதற்காகவா ஜனாதிபதி ஒருவரை அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டும்?

மாறாக, நீதித்துறையை விரிவுபடுத்தி, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, நாட்டில் அனைவருக்கும் சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்துவதே அரச தலைவரின் பிரதான பொறுப்பாக இருக்க வேண்டும்.

இதுவரை நாட்டில் அதிகாரத்தை வகித்த அரசியல் கட்சிகள் தமது சொந்த அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்வைத்துள்ளன. 18ஆவது மற்றும் 20ஆவது அரசமைப்புத் திருத்தங்கள் அவ்வாறான நோக்கங்களுடனேயே கொண்டுவரப்பட்டன.

ஆனால், 22ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தையோ அல்லது ஜனாதிபதியின் பதவிக் காலத்தையோ நீடிப்பதற்காகக் கொண்டுவரப்படவில்லை. மாறாக, நாட்டின் நலன், நீதித்துறையின் விரிவாக்கம், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் ஆகிய உயரிய நோக்கங்களுடனேயே இது கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நீதித்துறையை விரிவுபடுத்தி மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்குரிய சூழலை உருவாக்குவதே அரசின் பிரதான நோக்கம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

65 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

60 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

51 0 0