உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலீபனின் சிலை அகற்றம்; அரசுக்குப் பொறுப்பில்லை என்றால் உடனே சிலையை மீள வையுங்கள்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
112 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றிய விவகாரத்தில் தங்களுக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லை என அரச அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியுள்ள நிலையில், “அப்படியாயின் அந்தச் சிலையைத் திருப்பிக் கொண்டுவந்து அதே இடத்தில் வையுங்களேன், அதனுடன் பிரச்சினை முடிந்துவிட்டது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றிய விவகாரத்தில் தங்களுக்குப் பொறுப்பில்லை என்ற ரீதியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியுள்ளார். அப்படியாயின் பொலிஸார் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். அதற்குத் தாங்கள் பொறுப்பில்லை என்றால், ஏற்கனவே அவர்கள் சிலை வைக்கலாம் என்று கூறிய கருத்தின் அடிப்படையில், அரசுக்கு அதில் தொடர்பில்லையென்றால் தயவுசெய்து எடுத்த சிலையைத் திருப்பிக் கொண்டுவந்து வைக்கச் சொல்லுங்கள். பிரச்சினை அத்துடன் முடிந்தது.

எந்த அமைச்சரோ அல்லது அரசோ, ‘பொலிஸார் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை, அவர்களாகச் செய்கின்றார்கள், நாங்கள் பொறுப்பல்ல’ என்று கூறித் தங்களின் கைகளைக் கழுவிவிட முடியாது.

அமைச்சர், ‘தலைவருக்கு வெண்கலச் சிலை வைக்கப் போகின்றோம்’ என்று கூறுகின்றார் என்றால் அதையும் வையுங்கோ, நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்லர், அதை வரவேற்கின்றோம். யாழ். மாநகர சபையும் அதனை எதிர்க்காது.

அமைச்சர் அங்கீகரித்துவிட்டால் சட்டப்படி அனுமதி வழங்கலாம். நீங்கள் சம்மதித்தால் மாநகர சபையும் அதற்கான விண்ணப்பத்தைத் தரும். சட்டப்படி அங்கீகாரத்தைக் கொடுங்கள். இந்தச் சிலையையும் வைக்கலாம், அந்தச் சிலையையும் வைக்கலாம். தயவுசெய்து அந்த அங்கீகாரத்தை அமைச்சர் அல்லது அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல, நீங்கள் ஏற்கனவே தேர்தல் காலத்தில் சொன்னது போல், வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவருடைய (பிரபாகரன்) தாயாருடைய சிலையை வைப்பதற்கு அனுமதிக்குமாறு நான் திருப்பிக் கேட்கின்றேன். அவர்கள் இப்போது ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், நாங்களும் அந்தக் கோரிக்கைக்கு உடன்படுகின்றோம். எனவே, தேசியத் தலைவரின் வெண்கலச் சிலையை வைப்பதற்கான அங்கீகாரத்தை அரசும் உடனடியாக வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

66 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

60 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

51 0 0