உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரச பல்கலைக்கழகங்கள் கடும் நெருக்கடியில்; விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
93 பார்வைகள்

அரச பல்கலைக்கழகங்கள் கடுமையான மனிதவள பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளால் மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மு.ரவி தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உபத்தலைவர் கா. பாலச்சந்திரன், செயலாளர் ரவிகுமார், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சாந்தரூபன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே தலைவர் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எங்களுடைய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம், கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் பல தடவைகள் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதன் மூலமாக எங்களுக்கு எந்தவிதமான ஒரு சாதகமான பதிலும் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தராததன் காரணமாக, நாங்கள் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் தொடர்ந்து பல தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் நாங்கள் கடந்த 2 கிழமைக்கு முன்பதாக கருப்பு வாரம் ஒன்றை நாங்கள் அறிவித்து, அதன் மூலமாக எங்களுடைய அதிருப்தியை நாங்கள் தெரிவித்திருந்தோம். அதேபோல இந்த வாரம், அதாவது இன்றிலிருந்து இது பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு வாரமாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் பிரகடனம் செய்திருக்கின்றார்கள். ஆகவே இந்த வாரம் முழுவதும் நாங்கள் மக்களுக்கு தற்போது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற பிரச்சினைகள், அதேபோல இருக்கின்ற நெருக்கடிகள், விரிவுரையாளர் பற்றாக்குறை, உள்ளக வசதிகளினுடைய பற்றாக்குறை போன்ற சகல விடயங்களையும் எடுத்துக்கூறி, அதன் மூலமாக இன்றைய காலகட்டத்தில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக மக்களும் பொதுமக்களும் ஒரு தெளிவான ஒரு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை எங்களுடைய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கினங்க, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இன்றைய நாள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதற்காகத் தான் நாங்கள் இந்த இடத்தில் கூடியிருக்கின்றோம்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் 10 கோரிக்கைகளை முன்வைத்தார்கள். நாங்களும் 17 பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்ற சகோதர சங்கங்களும் இதனை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக இப்போதைக்கு பொதுமக்களுக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால், பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற இரண்டு பிரதானமான பிரச்சனைகள்;
பல்கலைக்கழக விரிவுரையாளர்களைப் பற்றாக்குறை. மாணவர்களுடைய நெருக்கடியின் காரணமாக மாணவர்களுக்குப் போதிய வசதிகள், வாய்ப்புகள் இல்லாதது. அதனால் ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது என்பது இப்போது ஒரு கேள்விக்குறியான நிலையில் தான் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இருக்கின்றது என்பதைத் தான் நாங்கள் கூற வேண்டியதாக இருக்கின்றது.

ஏற்கனவே பொதுக்கலை, பொதுப் பட்டதாரி மாணவர்களும், அதேபோல சிறப்புப் பட்டதாரி மாணவர்களும் 3, 4 வருடங்கள் (மருத்துவப் பீடத்திற்கு 5 வருடங்கள், ஏனைய பீடங்களுக்கு 4, 3 வருடங்கள்) ஆக பட்டப்படிப்புக் காலம் இருக்கின்ற அதே நேரத்தில், 2024-ஆம் ஆண்டு மாணவர்களை மட்டும் தான் நாங்கள் இப்போது அனுமதிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் எங்களுக்கு மீண்டும் அரசாங்கத்திலிருந்து ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது 2025-ஆம் ஆண்டு மாணவர்களையும் உடனடியாக உள்வாங்கும்படி ஆனால் அது இயலாத காரியமாக இருக்கின்றது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

உள்ளக வசதிக்கட்டமைப்புகள் என்பதைப் பற்றி அங்கேயும் பிரச்சினைகள் இருந்தபோதிலும் கூட, ஆசிரியர்களுடைய, விரிவுரையாளர்களுடைய பற்றாக்குறை, வகுப்பறை பற்றாக்குறை, ஆய்வுகூட வசதிகள் பற்றாக்குறையின் காரணமாக 2025-ஆம் ஆண்டு மாணவர்களை உள்வாங்குவது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதனை எங்களுடைய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் அரசாங்கத்திற்குத் தெளிவாகவே அறிவித்திருக்கின்றோம்.

ஆகவே அந்தவகையில் இங்கே இருக்கின்ற வசதி வாய்ப்புகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அதனால் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கக் கூடிய ஒரு சூழ்நிலையில்லை. அதேபோல விரிவுரையாளர்களை நாங்கள் தக்கவைத்துக் கொள்வது, அவர்களைத் தொடர்ந்து வைத்துக் கொள்வது சம்பந்தமாக சவால்மிக்க ஒரு விடயமாக எங்களுக்கு இருக்கின்றது. காரணம், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் கிடைக்கப் பெறுகின்ற வேதனத்தை விட, அரச பல்கலைக்கழகங்களின் வேதனம் மிகவும் குறைவாக இருக்கின்றதன் காரணமாக, பயிற்றுவிக்கப்பட்ட அல்லது கலாநிதி பட்டம் பெற்ற விரிவுரையாளர்கள், பட்டதாரிகள் கூட பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக இணைந்து கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். அதேநேரம் அவர்களுக்கு அங்கே இருக்கின்ற வேதனப் பற்றாக்குறை, வரிச்சுமை, காரணமாக அவர்களும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்குச் செல்கின்றனர் அல்லது இலங்கையிலிருக்கின்ற பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அவர்கள் செல்வதனால் எங்களுக்கு விரிவுரையாளர் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருக்கின்றது.

அத்துடன் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையேயான விகிதாசாரம் ஒன்று இருக்கின்றது. விஞ்ஞானப் பிரிவாக இருந்தால் ஒரு விரிவுரையாளருக்கு இத்தனை மாணவர்கள், சமூக விஞ்ஞானப் பிரிவாக இருந்தால் ஒரு விரிவுரையாளருக்கு இத்தனை மாணவர்கள் என்று. ஆனால் அந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இப்போது முழுமையாகவே மிகவும் கீழ்நிலையில் இருக்கின்றது. காரணம், விரிவுரையாளர்களை நாங்கள் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும், புது விரிவுரையாளர்களை வெற்றிடத்திற்கு ஏற்ப நிரப்புவதும் சிரமமான காரியமாக இருக்கின்றது.

அதேபோல எங்களுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றது, ஆனால் வெற்றிடங்களை நிரப்பும்படியாக அரசாங்கம் எங்களுக்கு ஓரளவு அனுமதி அளித்திருந்தபோதிலும் கூட, வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் இருப்பதற்கு மிகப் பிரதான காரணம் பல்கலைக்கழகங்களில் இருக்கின்ற சம்பளப் பற்றாக்குறையும், வரிச்சுமையும் ஆகும்.

இங்கே கலாநிதி பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து இங்கே வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். அதேபோல இங்கிருந்து தங்களுடைய முதுகலைமானி மற்றும் கலாநிதி பட்டப்படிப்பிற்காக வெளிநாடு சென்ற விரிவுரையாளர்களும் திரும்பி வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர், சிலர் வராமலும் விடுகின்றனர். ஆகவே தொடர்ந்து வெற்றிடங்களை நிரப்புவது என்பதும் தரமான விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்புவது எங்களுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. இதனால் பல்கலைக்கழக மட்டத்திலான தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றது.

இது சம்பந்தமாக எங்கள் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் ஜனாதிபதியை இரண்டு தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர்களிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து துணைவேந்தர்களையும் ஒன்றாக இணைந்து எங்களுடைய சம்மேளனம் கோரிக்கையை கையளித்திருக்கின்றார்கள். ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை உரிய அமைச்சுக்கு அது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மையில் கூறப்பட்டது. அது சம்மேளனத்திற்கு மிகவும் மனவேதனையை அளித்தது. காரணம், அவ்வளவு சிரமப்பட்டு நாங்கள் செய்தபோதிலும் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது.

இவ்வாறான செய்தியாளர் சந்திப்பை எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்துமாறும், தனித்தனியாக இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றியும் எடுத்துக்கூறுமாறு பணித்திருந்தார்கள்.

குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது இருக்கின்ற பிரதான பிரச்சினை மாணவர்களுடைய விடுதிப் பிரச்சினை. இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவெடுக்கப்பட்டதற்குக் காரணம் விடுதி வசதிகள் இங்கு போதுமானதாக இல்லை. வெளியிலும் மாணவர்கள் தங்கக்கூடிய வசதிகள் பல்கலைக்கழக சூழலில் இல்லை. நிறையப் பணம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. ஆகவே கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நலன் கருதி விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல தொலைவிலிருந்து வந்து கடமையாற்றும் விரிவுரையாளர்களுக்கும் குடும்ப விடுதிகள், குவாட்டர்ஸ் வசதிகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்துத் தான் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம். வரிச்சுமை காரணமாக அநேகமானோரை நாங்கள் இழக்க வேண்டியுள்ளது. நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்தைக் கேட்டிருந்தோம். வெள்ளிக்கிழமை நாங்கள் மீண்டும் சந்தித்து, பெரிய செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தவிருக்கின்றோம். எதிர்காலத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்துத் தீர்மானித்துச் செயற்படுத்துவோம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

50 0 0