உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாணவியிடம் அத்துமீற முயன்ற ஆசிரியர் கைது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
111 பார்வைகள்

தலவாக்கலை நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 13ஆம் தர மாணவியொருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டு, அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய சந்தேகநபர், நேற்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, மாணவியை விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு வருமாறு ஆசிரியர் அழைத்ததாகவும், அங்கு மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து மாணவி தனது பெற்றோருக்கு தகவல் வழங்கியதுடன், பெற்றோருடன் தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

69 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

50 0 0