உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த முச்சக்கரவண்டி சுற்றிவளைப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
113 பார்வைகள்

தோட்டத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த முச்சக்கரவண்டியை தோட்ட இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் மேபீல்ட் சந்தி பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேபீல்ட் தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை மலையில் முச்சக்கரவண்டியொன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அவதானித்த தோட்ட இளைஞர்கள், முச்சக்கரவண்டியை சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியில் வந்திருந்த இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், மற்றொருவரை இளைஞர்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து மேபீல்ட் சந்தியில் பெருமளவான இளைஞர்கள் ஒன்றுகூடியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக குறித்த தேயிலை மலைப்பகுதியில் போதைப்பொருட்களுடன் சில இளைஞர்கள் பிடிபட்டதாகவும், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று சந்தேகத்திற்கிடமான முறையில் தேயிலை மலைப்பகுதியில் நீண்ட நேரமாக தொலைபேசியை பயன்படுத்தியபடி சுற்றித்திரிந்த நபர்களை அவதானித்ததாகவும், அவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முயன்றதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியையும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் வரும்வரை விடமாட்டோம் என இளைஞர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திம்புல்லை–பத்தனை பொலிஸார், முச்சக்கரவண்டி சாரதியையும் முச்சக்கரவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, மேபீல்ட், காமஸ்டன் மற்றும் ஸ்டோனிகிளிப் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியில் அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் அபின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சந்தேகம் நிலவுவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேயிலை மலைப்பகுதிகளுக்கு சிலர் தினமும் வருகை தந்து தொலைபேசி மூலம் இடங்களை அடையாளப்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலைமைக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தோட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்லை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

64 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

60 0 0