உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 29.09.2026

ராசி பலன்கள் 5 நாட்கள் முன்
102 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இன்று நல்லதொரு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று இனிமையாக பேசுகிறீர்கள். நிறைய நல்ல விஷயங்களை, நல்ல வார்த்தை பேசி சாதித்துக் கொள்வீர்கள். வசீகரத் தோற்றம், வசீகரப் பேச்சு இன்று உங்களின் அடையாளமாக இருக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். நீங்கள் இழந்த நிறைய நல்ல விஷயங்களை திரும்பவும் மீட்பதற்கும் வழி பிறக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையில்லாத எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி கிடைக்கும். மனதில் இருந்து வந்த தேவையற்ற சந்தேகங்கள் சரியாகும். குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். இறைவனுக்கும் நன்றி சொல்லுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சமும் பெருகும். கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டோமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று ஒரு ரொக்க பரிசு கிடைக்கும். அதிர்ஷ்டமான நாளாக இந்த நாள் இருக்கப் போகிறது. மகாலட்சுமிக்கு நன்றி சொல்லி ஒரு தீபம் ஏற்றி விடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். அனாவசியமாக பேசாதீர்கள். தேவையில்லாத பஞ்சாயத்துக்கு போகாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருங்கள். கட்டுக்கடங்காத கோபம் வந்தால் ஈசனை நினைத்து ஓம் நமசிவாய செல்லுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். முருகன் வழிபாடு செய்வது மன அமைதியை கொடுக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய தடைகள் விலகும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சினைகள் குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். பகைவர்கள் எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். வீண் வம்பு வழக்குகளில் இருந்து விலகி விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். வேலையில் கொஞ்சம் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரம் எப்போதும் போல சுமூகமாக செல்லும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பக்குவத்தோடு பேசி நிறைய பிரச்சினைகளை சரி செய்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். புது உறவுகளுடைய அறிமுகமும் கிடைக்கும். மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும். காரிய தடை விலகும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடத்த பேச்சுவார்த்தை தொடங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகளை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண் விரைய செலவுகள் வரிசை கட்டி காத்துக்கொண்டு இருக்கு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத மனிதர்கள் என்ன ஆசை வார்த்தை காட்டினாலும் ஏமாந்து போகக்கூடாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி தேடக்கூடாது ஜாக்கிரதை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். உங்களுடைய வெற்றிக் கொடி உயரத்தில் பறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். சில பேருக்கு தங்கம் வாங்கக்கூடிய அதிர்ஷ்டமும் காத்து கிடக்கிறது. வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் நாள் இன்று.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு வந்தாலும் மனநிறைவு கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆதரவாக நிறைய நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. வீண்விரய செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். அதை சமாளிப்பதற்கு மட்டும் கொஞ்சம் சிரமம் எடுக்கும். இருந்தாலும் பெரிதாக பிரச்சினைகள் வருவதற்கு இன்று வாய்ப்புகள் கிடையாது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

84 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

81 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 30.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தைரியமான நாளாக இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். பல நாள் தொல்லைகள் இன்றோடு முடியும். மனபாரம்…

115 0 0