உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
105 பார்வைகள்

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொகு பெட்டி’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் தனது தாயாருடன் பயணித்த வாடகைத் முச்சக்கர வண்டியை இலக்கு வைத்து பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து காரில் வந்த குழுவினர் T-56 ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வாடகைத் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், குறித்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததுடன், அவரது தாயாரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.

அவர் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குத் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என…

103 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

107 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

104 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பத் தடை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனைப் பற்றிய எந்தவொரு தடைசெய்யப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய கூடாது எனவும் அக்டோபர் மாதம் 12ம்…

92 0 0