உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
108 பார்வைகள்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை அடிக்கு முன்பு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், பொலிஸாரின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதை யை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதய சந்திரா,சங்க பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

105 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என…

103 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

105 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பத் தடை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனைப் பற்றிய எந்தவொரு தடைசெய்யப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய கூடாது எனவும் அக்டோபர் மாதம் 12ம்…

92 0 0