உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றம்; சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
164 பார்வைகள்

“ஈழமண்ணில் ஈகச்சுடர் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள – பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் நேற்று அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூரில் அண்மையில் பொதுமக்களால் நிறுவப்பட்ட அச்சிலையை, தமது ஆதிக்கவெறியை வெளிப்படுத்தும் வகையில் சிங்களப் பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று அந்தக் கட்சியின் நிறுவுநர் தொல்காப்பியன் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி ஈகச்சுடர் தியாக தீபம் திலீபனின் இன்னுயிர் மூச்சு அடங்கியது.

இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து துளி வன்முறைக்கும் இடமின்றி அறவழியில் 12 நாட்கள் உண்ணாநிலையில் கடும் தவமிருந்த திலீபன், தனது மகத்தான ஈகத்தால் உலகின் கவனத்தை ஈர்த்தார். அவர் ஆயுதப் பயிற்சி பெற்ற ஒரு போராளியாயிருந்தும், வன்முறையில்லா அறவழியில் போராடும் துணிவையும் வலுவையும் கொண்டிருந்தார். அதன் மூலம் வெகுமக்களின் பேரன்பை வென்றெடுத்தார். மேதகு பிரபாகரனின் வணக்கத்துக்குரியவர் என்னும் பேறு பெற்றார்.

அத்தகைய மக்கள் போராளியை நன்றிப் பெருக்கோடு உலகெங்கும் தமிழ் மக்கள் கடந்த 39 ஆண்டுகளாக நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஈழத்திலும் தமிழ் மக்கள் அவரது திருவுருவச் சிலையை நிறுவி அவருக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் இந்த உணர்வைக் காயப்படுத்தும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் வகையிலும் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் அவரது சிலையை அப்புறப்படுத்தியிருப்பது அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் இடதுசாரிகள், முற்போக்கானவர்கள் என்கிற தோற்றம் உண்மையல்ல என்பதை உலக மாந்தருக்கு உணர்த்தியுள்ளது.

தியாக தீபம் திலீபனின் சிலையை அவர்கள் எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவரைத் எம் மக்களின் நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் அகற்றிவிட முடியாது.

எமது திலீபன் கனவு ஒருநாள் நனவாகும் என்கிற நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் நாம் ஒருங்கிணைந்து களமாடுவோம்” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0