உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றப்பட்டது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
120 பார்வைகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை ஜனநாயக ரீதியாகவும் அரசியலமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்றைய தினம் (28) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும், விவாதத்தின் பின்னர் தேவையான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்கச் சமமான வாய்ப்பளிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், எதிர்க்கட்சியினர் சுயாதீன நீதித்துறையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதம நீதியரசர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தத் திருத்தத்திற்கு எதிராகத் தெளிவான அரசியல் காரணங்களை முன்வைக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

22ஆவது திருத்தத்தின் பின்னர் எதிர்க்கட்சிக்குள் இருக்கும் பிளவு மேலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளதாகவும், தெளிவான அரசியல் கோஷங்கள் எதுவும் இன்றி நபர்களை மட்டும் ஒன்றிணைத்துச் செல்வதால் ஏற்படும் குழப்ப நிலையே இன்று எதிர்க்கட்சியில் காணப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் (PTA) 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகத் தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அடக்குவதற்குத் தனித்துவமான புதிய சட்ட நடவடிக்கைகளை முன்வைக்க அரசாங்கம் காய்நகர்த்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயரும் சந்தர்ப்பங்களில், அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு நிவாரணங்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, சர்வதேச எரிபொருள் விலை உயர்வைக் கருத்திற் கொண்டு மக்களுக்குத் தேவையான சில நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் உறுதியளித்தார்.

அத்துடன், நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் விசேட திட்டமொன்றை அமல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர்களைக் கைது செய்யும் பணிகளும், உள்நாட்டில் உள்ளவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவொரு பாதாள உலகக் குழுவிற்கோ அல்லது நபருக்கோ அரசாங்கத்தின் எந்தவொரு பாதுகாப்பும் கிடைக்காது என்றும், நாட்டின் பாதாள உலகக் குற்றங்களை முற்றாக ஒழித்து அமைதியை ஏற்படுத்தத் தேவையான அனைத்து அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

74 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

66 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

61 0 0