உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

குற்றவாளிகளைத் தண்டிக்க எந்த எல்லையும் கிடையாது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
140 பார்வைகள்

ஊழல் மற்றும் மோசடி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் எந்தவிதமான எல்லையும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான பல்வேறு விசாரணைகள் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றன என்றும், அவற்றை முறையாக முன்னெடுப்பதற்குச் சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவைப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
“திருடர்களைத் தண்டிப்பதற்கு எல்லையே இல்லை. இந்த அரசின் எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகளிலும் இந்த நடவடிக்கைகள் தொடரும். அடுத்த முறையும் அவர்களைப் பிடிப்போம். இவை பெரிய அளவிலான விசாரணைகள் என்பதால், எங்களுக்குச் சர்வதேச ஆதரவு தேவைப்படுகின்றது. இந்த விசாரணைகள் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

எங்களுக்கு யார் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணம் இல்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. எங்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காகத் தங்கியிருந்த ஹோட்டலில் இராணுவத்தினர் சோதனை நடத்தி, பின்னர் அவரை அழைத்துச் சென்றமை, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சுமார் 600 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டமை மற்றும் பிரதமர் நியமிக்கப்படுவதற்கு முன்னரே சி.ஐ.டி. பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டமை ஆகிய செயற்பாடுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட பழிவாங்கல்களாக முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய அரசு எத்தகைய தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளுமின்றிச் சட்டத்தின் ஆட்சிக்கு மாத்திரமே முதலிடம் கொடுத்துச் செயற்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

60 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

78 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0