உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அகிம்சை நாயகன் திலீபனின் சிலையை அகற்றி அரக்கத்தனத்தின் அதிபரானார் அநுர.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
179 பார்வைகள்

அறவழியில் போராடி தன்னுயிரை தற்கொடையாக தந்த புனிதன் எங்களது அண்ணன் திலீபனுக்கே இந்த நிலை என்றால் ஈழத்திருநாட்டில் வாழும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு தினம் தினம் என்ன அக்கிரமம் நடக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இவ்வாறு தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவுனரும், திரைப்பட இயக்குனருமான வடமலை கௌதமன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் நினைவு முற்றத்தில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையானது யாழ்ப்பாண பொலிஸாரால் அகற்றப்பட்டமை குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நிறைவேற்றப்படக்கூடிய, நிறைவேற்றப்பட வேண்டிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்கள் நீராகாரம் கூட அருந்தாமல் தனது இன்னுயிரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தியாகம் செய்தார். இத்தகைய தியாகத்தை செய்வதற்கு இவ்வுலகில் எவர் முன்வருவர்?

அவரது தியாகத்தை கண்டு கூனி குறுகி நிற்க வேண்டிய சிங்கள பேரினவாதம், சற்றும்கூட கூச்சமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இன்று அவரது சிலையை உடைப்பதற்கு துணிந்துள்ளது. இந்த சம்பவத்தால் நீங்கள் வீரர்கள் ஆகிவிடுவீர்கள் என்று நினைக்கின்றீர்களா? ஒருபோதும் இல்லை. மீண்டும் மீண்டும் கோழைகள் என்பதை இவ் உலகத்துக்கு பறைசாற்றியிருக்கின்றீர்கள்.

உங்களது கட்சிக்கு நம்பி வாக்களித்த எங்கள் தமிழர்களுக்கு நீங்கள் செய்கின்ற நன்றிக்கடன் இதுதானா? குற்ற உணர்ச்சியால் உங்கள் மனசாட்சி சற்றும்கூட உறுத்தவில்லையா? தன்னுயிரை தியாகம் செய்த தியாகியின் சிலையை உடைத்து சென்ற தங்களுக்கு மனசாட்சி, குற்ற உணர்ச்சி இவையெல்லாம் இன்னும் இருக்கும் என எதிர்பார்ப்பது எங்கள் தவறுதான்.

இப்படியெல்லாம் செய்து இறுதியில் எதனை சாதிக்கப்போகின்றீர்கள்? உங்கள் இலட்சியம் என்னவாக இருக்கிறது? சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதா? அல்லது தமிழ் மக்களை மிரட்டுவதா? கல்லாலான ஒரு சிலையே உங்கள் அரசை இந்த அளவிற்கு நிலைகுலையச் செய்கின்றது என்றால் ஈழத் தமிழரின் வீரத்தை நிரூபிக்க நாங்கள் வேறு எந்த ஆயுதமும் இனி கையில் எடுக்க தேவையில்லை.

இதற்கு முன்பு ஆண்டவர்கள் எல்லாம் கொடூர முகத்தை காட்டி கோரத்தாண்டவம் ஆடினார்கள் நீங்களோ குழந்தை முகத்தை காட்டி குரூரத்தாண்டவம் ஆடுகிறீர்கள். பாவம் இது எதனையும் அறியாத எம் மக்கள் உங்களிடம் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் எங்களின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுச் சின்னத்தை உடைத்தீர்கள். உலகம் முழுவதும் வாழும் எம் தமிழர்கள் பொங்கி எழுந்ததும் அந்த வெக்கை தாங்காமல் தாழ்பணிந்து நீங்களே மீண்டும் கட்டியெழுப்பினீர்கள். அறத்தோடு சொல்கிறேன். எங்களின் புனிதச் செல்வனின் சிலையை எந்த வாகனத்தில் பெயர்த்தெடுத்து சென்றீர்களோ அதே வாகனத்தில் மீண்டும் எடுத்து வந்து அதே இடத்தில் நிறுவுவதற்கு வழி செய்யுங்கள். அதனை செய்யத் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் முன்பும் நீங்கள் கூனிக் குறுகி நின்று, வெட்கப்பட நேரிடும். இது உங்களுக்கு மட்டுமல்ல, இறுதியில் உங்களது இனத்துக்கே அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கும் இது உறுதி.

இந்த சந்தர்ப்பத்தில் அடிவயிற்றின் பெருவலியோடு “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்கிற எங்கள் திலீபன் அண்ணாவின் உணர்வுப் பெருக்கான வாசகத்தை மீண்டும் உலகத்தமிழர்கள் மத்தியில் நினைவூகூர விரும்புகிறேன் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

140 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0