உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
28 திங்கள்

திலீபனின் சிலை அகற்றம் குறித்து அமைச்சர் சந்திரசேகரன் விளக்கம்!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
103 பார்வைகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்பு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.

தென்னிலங்கையில் உள்ள ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், சட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைச்சாலையை எதிர்கொள்ளும் பயத்தில் அரசாங்கத்தை வீழ்த்தவும், மீண்டும் இனக்கலவரங்களைத் தூண்டவும் பார்க்கிறார்கள்.

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சினைகளைப் பேசுவதையோ, மக்கள் நலத் திட்டங்களை வரவேற்பதையோ விடுத்து, கடந்த தேர்தலில் மக்கள் ‘தேசிய மக்கள் சக்திக்கு’ அளித்த ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் செயல்படுகின்றனர்.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

மாநகரசபை எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுக்காததால் பொலிசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மாநகரசபையும் பொலிசாரும் தங்களின் எல்லைக்குட்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாததன் விளைவே இது. இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் தேவையான உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மூன்று மாதங்களுக்கான எரிபொருள் மானிய யோசனை நாளை அமைச்சரவைக்கு வருகிறது

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான அமைச்சரவைப்…

90 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும்…

194 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து நல்லூரில் எழுச்சிப் போராட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து, நினைவாலயத்துக்கு முன்பாக இன்று மாலை 5…

88 0 0
இலங்கை செய்திகள்

நற்பிட்டிமுனை மண்ணின் சாதனையாளர்களைக் கௌரவித்த அல்-கரீம் பவுண்டேஷன்!

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மண்ணுக்கு மகுடம் சூட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா” நேற்று சனிக்கிழமை (26) சவளக்கடை ரோயல் கார்டன் மண்டபத்தில் மிகச்…

81 0 0