உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு: வடக்கு – கிழக்கில் நாளை போராட்டம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
180 பார்வைகள்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எட்டு மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நல்லூர் நினைவாலயப் பகுதியில் திலீபனின் நினைவாக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையை இன்று அதிகாலை பொலிஸார் அகற்றிச் சென்றனர். ஜனநாயக முறைப்படி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்தச் செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் இந்த அத்துமீறலைக் கண்டித்தும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளை எதிர்த்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ள பிரதான இடங்கள்:-

  1. யாழ்ப்பாணம் மாவட்டம்: நல்லூரடி
  2. திருகோணமலை மாவட்டம்: சிவன் கோவிலடி
  3. கிளிநொச்சி மாவட்டம்: கந்தசாமி கோவிலடியிலிருந்து கச்சேரி வரை
  4. அம்பாறை மாவட்டம்: தம்பிலுவில் மத்திய சந்தையடியில் ஆரம்பித்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை
  5. மன்னார் மாவட்டம்: தந்தை செல்வா நினைவுத் தூபியடி
  6. மட்டக்களப்பு மாவட்டம்: காந்தி பூங்கா வடிவில்/ காந்தி பூங்கா அருகில்
  7. வவுனியா மாவட்டம்: பொங்குதமிழ் நினைவுத் தூபியடியிலிருந்து பழைய பஸ் நிலையம் வரை
  8. முல்லைத்தீவு மாவட்டம்: மாங்குளம் சந்தி

தமிழர்களின் உரிமைகள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையிலும், தியாகி தீபம் திலீபன் நினைவேந்தல் உரிமைக்குரலை வலுப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் உறவுகளும் பெருமளவில் திரண்டு கலந்துகொள்ளுமாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
…………………………

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

149 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

140 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0