உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
28 திங்கள்

யாழில் சிக்கிய போ@தைப்பொருளின் பெறுமதி ரூ. 1.5 பில்லியன்!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
73 பார்வைகள்

யாழ்ப்பாணம் – மாதகல் குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் இன்று (27) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்தப் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது மீட்டெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்த அளவு சுமார் 81 கிலோகிராம் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்குள் சுமார் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 45 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்குவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், அண்மைய காலங்களில் வடக்கிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 75 பில்லியன் ரூபாய் எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதிகளின் பெறுமதி 56 பில்லியன் ரூபாய் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வடக்கு கட்டளை பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, பல குழுக்கள் இணைந்து இந்த முற்றுகையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவியுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.

கடற்படையினர் தற்போது குழுக்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

அத்துடன், கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சிக்கலான சூழலில் இடம்பெறுவதாகவும், கடற்படை எதிர்காலத்தில் நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக தேவைப்படும் உபகரணங்கள் தற்போது கடற்படைக்கு கிடைத்து வருவதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் பரந்தளவில் முற்றகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மூன்று மாதங்களுக்கான எரிபொருள் மானிய யோசனை நாளை அமைச்சரவைக்கு வருகிறது

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான அமைச்சரவைப்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும்…

193 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றம் குறித்து அமைச்சர் சந்திரசேகரன் விளக்கம்!

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில்…

102 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து நல்லூரில் எழுச்சிப் போராட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து, நினைவாலயத்துக்கு முன்பாக இன்று மாலை 5…

87 0 0