உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அகற்றப்பட்ட தியாகி திலீபனின் சிலை – தமிழரசு கட்சியும் உடந்தை என கஜேந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
154 பார்வைகள்

நல்லூரடியில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையானது அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அனுர அரசும், இலங்கை தமிழரசு கட்சியும் இணைந்து இதனை அரங்கேற்றியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்றையதினம் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரவு இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விதமான முன்னறிவித்தலும் எமக்கு வழங்காமல் 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்து கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக அந்த சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதன்மூலம் அனுர அரசின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது. அனுராசங்கமானது தேர்தல் பிரச்சாரங்களின் போது மேடைகளில், “நினைவேந்தல்களை அனுமதிப்போம், தாங்கள் சிலைகளை நிறுவுவோம்” என்ன அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு பொய்களை கூறி வாக்குகளை பெற்று பின்னர் தமிழ் மக்களின் குரல்வளைகளை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நசுகின்றார்கள். மகிந்த, கோட்டா போன்றோரின் இனவெறி மனப்பான்மையுடன் அனுர அரசும் உள்ளது. இந்த திருவுருவத்திலே அகத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இந்த அனுர அரசு அவமானப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அனுரவினால் ஒருபோதும் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவரைக் கோழைத்தனமான ஆட்சியாளராகவே நான் கருதுகிறேன். எமது இரத்தத்தோடும், உணர்வோடும் சம்மந்தப்பட்ட விடயங்களோடு அவர் விளையாடுகின்றார். இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காகவே இதனை செய்கின்றார். அனுர குமார திசாநாயக்க நேரடியாக தமிழர்களிடம் இந்த விடயத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த விடயத்திற்கு பின்பாக சி.வி.கே.சிவஞானம் இருக்கின்றார் என்பதனையும் நாங்கள் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம். நிலைவேந்தலின்போது ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பான பிரச்சினை எழுந்தது. ஒலிபெருக்கியை பயன்படுத்த, அந்த காணி உறுதி உள்ளவர்கள் ஊடாக அனுமதி பெறுமாறு பொலிசாரால் கூறப்பட்டது. இந்நிலையில் எமது உறுப்பினர்கள் ஊடாக யாழ்ப்பாண மாநகர சபையிடம் கடிதத்தினை கோரினோம். ஆனால் கடிதம் தரவில்லை. இந்த விடயத்தில் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தமது கட்சி தலைமை கூறியதாக மேயர் கூறினார். அதன்பின்னர் சி.வி.கே.சிவஞானத்துடன் நாங்கள் பேசிய போது அவர் மிகவும் காட்டமாக என்னுடன் பேசினார். யாரைக் கேட்டு இந்த சிலையை வைத்தீர்கள்? 26ஆம் திகதியோடு இந்த சிலையை எடுக்காவிட்டால் நான் இந்த சிலையை அகற்றுவேன் என்று கடும் தொனியில் கூறினார்.

இவர் இவ்வளவு கீழ்த்தரமான செயற்பாட்டை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பொலிசாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டுள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறேன். தமிழரசு கட்சியின் செயற்பாட்டிற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழரசு கட்சியும் அனுரா அரசாங்கமும் இணைந்து தான் இந்த சதியை செய்துள்ளது என்பதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது தொடர்பாக வினவுவதற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை தொடர்பு கொண்டும் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் 4 ஆவது அறிக்கை பச்சைப் பொய்! : கோடீஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்…

95 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி! : கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு…

86 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? : சஜித் கேள்வி

டித்வா அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை…

83 0 0
இலங்கை செய்திகள்

அநுர தலைமையிலான அரசுக்கு ஆதரவாக குருநாகலிலும் மாபெரும் அமைதிப் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் குருநாகலில்…

74 0 0