உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சதிமுயற்சிகளைத் தோற்கடித்து அரசைப் பாதுகாத்தே தீருவோம் : வாசுதேவ திட்டவட்டம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
141 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதிமுயற்சிகளைத் தோற்கடித்து, இந்த அரசைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசு நாட்டின் உயர் வர்க்கத்தினருக்குப் பல வகைகளிலும் பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக, போதைப்பொருள் வர்த்தகம் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டுத் தலைமறைவாகியிருந்த பல குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கோடிக்கணக்கான டொலர்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியவர்கள் மற்றும் சட்டவிரோதமாகப் பணத்தை வெளியேற்ற முயன்ற நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாம் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் ‘பண்டோரா ஆவணங்கள்’ தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தினோம்.

நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பெருமளவிலான பணத்தை மீளப் பெற வேண்டும். எனினும், அன்றைய அரசுகள் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ஆனால், இன்று தற்போதைய அரசு இது தொடர்பில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதால், அது உயர் வர்க்கத்தினருக்கும் பிற்போக்குவாத சக்திகளுக்கும் வேதனையாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் ஒன்றிணைந்து அரசைக் கவிழ்க்கவும், மக்களைக் கிளர்ச்சியடையச் செய்யவும் முயற்சிக்கின்றனர்.

தற்போதைய அரசின் கீழ் மக்களுக்கான பொருளாதாரச் சிரமங்கள் (அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை) இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும், இவற்றுக்கான தீர்வு ‘திசைகாட்டி’ அரசைக் கவிழ்ப்பது அல்ல. மாறாக, அரசு முன்வைத்துள்ள அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே தீர்வுகாண முடியும்.

சகல பிரச்சினைகளையும் இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது. மிகப்பெரிய பொருளாதாரச் சுமையுடனேயே இந்த அரசு செயற்படுகின்றது. எனவே, அரசுக்கு மேலும் உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.
………………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

இலங்கைக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கம் மேற்குத் திசையினூடாக அப்பால் நகர்ந்து செல்கின்றது. எவ்வாறாயினும் இதன் தாக்கம் இன்றும் காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட…

74 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் 4 ஆவது அறிக்கை பச்சைப் பொய்! : கோடீஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்…

95 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி! : கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு…

86 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? : சஜித் கேள்வி

டித்வா அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை…

83 0 0