உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசுக்கு அழுத்தம் கொடுப்பது பயங்கரவாதமா? : புபுது ஜயகொட கேள்வி

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
114 பார்வைகள்

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதல்ல, மாறாக மக்களின் அரசியல் செயற்பாடுகளை முடக்கி அரச அதிகாரத்தை வலுப்படுத்துவதாகும் என்று முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெயர் அரசைப் பாதுகாப்பதாகக் கூறப்பட்டாலும், மக்களின் அரசியல் செயற்பாடுகளிலிருந்து அரசைப் பாதுகாத்துக்கொள்வதும், மக்கள் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தி அரச அதிகாரத்தை அதிகரிப்பதுமே இதன் உண்மையான நோக்கமாகும்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதுபோல் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மக்களின் அடிப்படை அரசியல் செயற்பாடுகளுக்கான வெளியைக் சுருக்கும் ஆபத்தான நோக்கமே மறைந்துள்ளது.

முந்தைய சட்டங்களில் பயங்கரவாதம் என்பது ஆயுத மோதல்கள் மற்றும் கொலைச் செயற்பாடுகளுடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டமூலத்தில் அரசியல் அல்லது கருத்தியல் நோக்கத்துடன் அரசிடமோ அல்லது சர்வதேச அமைப்பிடமோ எதையாவது செய்யுமாறோ அல்லது செய்ய வேண்டாமெனவோ அழுத்தம் கொடுப்பதும் கூட பயங்கரவாதமாகக் கருதப்படக்கூடிய வகையில் வரைவிலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தொழிலாளர்கள் தமது ஊதியத்தை அதிகரிக்குமாறு கோருவதோ அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டாமெனக் கோருவதோ கூட எதிர்காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளாக முத்திரைக் குத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் பிரதான இலக்கு பயங்கரவாதிகள் அல்லர். மாறாக, தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுமே இதன் நேரடி இலக்குகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி தனிநபர்களைத் தடுத்து வைக்கும் அதிகாரம் நீதிமன்றங்களிடமே காணப்படுகின்றது.

ஆனால், இந்தப் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம், எத்தகைய நீதிமன்ற உத்தரவுமின்றி ஒருவரை ஒரு வருடம் வரை தடுத்து வைக்கும் அதீத அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்படவுள்ளது.” – என்றார்.
…………………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

இலங்கைக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கம் மேற்குத் திசையினூடாக அப்பால் நகர்ந்து செல்கின்றது. எவ்வாறாயினும் இதன் தாக்கம் இன்றும் காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட…

74 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் 4 ஆவது அறிக்கை பச்சைப் பொய்! : கோடீஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்…

95 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி! : கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு…

86 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? : சஜித் கேள்வி

டித்வா அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை…

83 0 0