உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு சம்பவம்; ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
133 பார்வைகள்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்ஓயா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று (26) அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெடிப்பு காரணமாக அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட போதிலும், வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0