உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
91 பார்வைகள்

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில், நேற்று (25) விசேட கள ஆய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எச். அம்ஜத் அலி அவர்களின் சபை முன்மொழிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் அவர்களின் கோரிக்கையின் பேரிலும் இக் கள ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் வவ்வாளோடை களப்பிற்கு நேரில் விஜயம் செய்து, அதன் தற்போதைய நிலைமை, நீர்வளம், சுற்றுச்சூழல் தன்மைகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான பொருத்தப்பாடுகள் குறித்துத் தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும், எதிர்காலத்தில் இக் களப்பில் மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான வளர்ப்பு முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இத் திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில், பிரதேசத்தின் இயற்கை நீர்வளத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதுடன், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நிந்தவூர் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக் கள ஆய்வின் போது பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். ஜாபிர், எச். அம்ஜத் அலி, கே.எம். ஜலீல், NAQDA அதிகாரிகள் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

102 0 0