உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

இன்றைய ராசி பலன்கள் – 26.09.2026

ராசி பலன்கள் 18 மணி நேரம் முன்
71 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று அம்மன் வழிபாடு செய்தால் பெரிய அளவில் நல்ல பலன்களை பெறலாம். தேவையில்லாத மனக்கசப்பு நீங்கும். எதிரி தொல்லை விலகும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். டென்ஷன் ஆகக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. உறவுகளோடு சண்டை வாக்குவாதம் செய்ய வேண்டாம். முன்கோபம் அதிகரித்தால், நிறைய இழப்புகள் ஏற்படும். இன்று கவனமாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லதை வெளிப்படையாக யாரிடமும் சொல்ல வேண்டாம். பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானம் தேவை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விண் விரைய செலவுகளாக இருக்கலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட நாள் குழப்பத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புரட்டாசி முடிந்ததும் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று தைரியமாக தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி அடையாமல் ஓய மாட்டீர்கள். நாலு பேருக்கு முன் உதாரணமாக திகழப் போகிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய நண்பர்களின் அறிமுகம் புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். இலாபம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். இன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ப்ரோமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. தேவையில்லாத கெட்ட பழக்கவழக்கத்திலிருந்து விடுபடுபீர்கள். இறைவனின் அருளால் இன்று நிறைய நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சில பேருக்கு சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் வாங்கக்கூடிய நல்ல நேரம் கூட கைக்கூடி வரலாம். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும் நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். அமைதியாக உங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வேகத்தை விட அதிகமாக விவேகம் வெளிப்படும். நல்ல பெயர் வாங்குவீர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று மறப்போம் மன்னிப்போம் என்று, உங்களுடைய வாழ்க்கையை நேர்மறையாக மாற்றிக் கொள்வீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். நீண்ட நாள் பகையை மறந்து, உறவுகளோடு ஒன்று…

93 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்.…

85 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். அமைதியான இந்த நாள் உங்களுடைய வேலையையும் வியாபாரத்தையும் சுமூகமாக எடுத்து செல்லும். உங்கள் மீது விழுந்த தேவையில்லாத பழி…

49 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராகும். வங்கி கடன் முயற்சிக்கலாம். வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்கு நல்ல…

66 0 0