உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் விமர்சையாக ஆரம்பமான உலக சுற்றுலா தின நிகழ்வு – ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
175 பார்வைகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம், உணவுத் திருவிழா முதலாம் நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (25) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,உட்பட திணைக்கள தலைவர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் உள்ளடங்களாக விருந்தினர்கள் உள்ளூர் உணவு உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

உலக சுற்றுலா தின மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வுகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற உள்ளன.

குறித்த நிகழ்வானது மன்னார் கீரி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் காற்று காரணமாக மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0