போ**தைப்பொருட்களுடன் மூவர் கைது.!
பிலியந்தலை போகுந்தர பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை மேற்கு மாகாண வட குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போகுந்தர பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன், மனைவி அடங்கிய தம்பதியினரும் அவர்களின் முக்கிய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஹெரோயின் 11 கிலோகிராமும், ஐஸ் 6 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 30 கோடி ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.


