உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 25 இந்தோனேசிய மீனவர்களை கரைக்கு கொண்டுவர கடற்படை உதவி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
116 பார்வைகள்

இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் MV MOONSTONE கப்பலினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மீட்கப்பட்டவர்களை, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், மேலதிக நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வர 2026 செப்டம்பர் 24 ஆம் திகதி இரவு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த இந்தோனேசிய மீன்பிடிப் படகு 2026 செப்டம்பர் 22 ஆம் திகதி கடலில் கவிழ்ந்ததில், அதில் இருந்த இந்தோனேசியப் பிரஜைகள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

ஆபத்தில் சிக்கிய இந்தோனேசியர்களில் 25 பேர் MV MOONSTONE கப்பலினால் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அந்த கப்பல் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு உடனடியாகப் பதிலளித்த கடற்படையினர், கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக இரண்டு (02) கடற்படைக் படகுகளை அனுப்பி வைத்தனர்.

இதற்கமைய, MV MOONSTONE படகு மூலம் அழைத்து வரப்பட்ட 25 இந்தோனேசியப் பிரஜைகளும் கடற்படைக் கப்பல் ஒன்றின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0