உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
25 வெள்ளி

நுவரெலியா மாவட்ட செயலக முத்திரைகளை போலியாகத் தயாரித்து பாரிய மோசடி!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
72 பார்வைகள்

நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பிரதேசவாசிகளிடம் பணம் வசூலித்த ஐந்து சந்தேகநபர்களை நுவரெலியா பிராந்திய குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்பு நிலையங்களை (Communication centers) நடத்திச் சென்றவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனுக்குப் பதிலாக, அந்த அலுவலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளராகத் தங்களைக் காட்டிக்கொண்டு, அவர்களின் போலி கையொப்பங்களைப் பயன்படுத்திச் சந்தேகநபர்கள் இந்த மோசடியைச் செய்துள்ளனர்.

குறித்த இரு அதிகாரிகளின் போலி கையொப்பங்களைப் பயன்படுத்திப் பணம் வழங்கியவர்களுக்குச் சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட சில கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து மாவட்ட செயலாளருக்கு அனுப்பப்பட்ட சில கடிதங்களைப் பரிசீலித்தபோதே, அக்கடிதத் தலைப்புகளும் கையொப்பங்களும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதற்கமைய, மாவட்ட செயலாளரினால் நுவரெலியா பிராந்திய குற்றவியல் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் சிலரின் உதவியுடன் சந்தேகநபர்கள் அப்பகுதிவாசிகளிடம் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதுடன், பெற்றுக்கொண்ட பணத்தை உறுதிப்படுத்துவதற்காகக் கடிதத் தலைப்புகளில் போலி முத்திரையிட்டு கடிதங்களை வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து போலி முத்திரைகள், கடிதத் தலைப்புகள் மற்றும் அவற்றைச் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்துக் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், தனது பெயரையும் மேலதிக மாவட்ட செயலாளரின் பெயரையும் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு விழாக்களுக்காகப் பிரதேசவாசிகளிடம் பணம் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறித்த விழாக்களில் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறிவிட்டு, பின்னர் தவிர்க்க முடியாத காரணமாக வரமுடியவில்லை எனத் தொலைபேசி மூலம் அறிவித்து, கூட்டங்களை நடத்துமாறு தெரிவிக்கும் தந்திரத்தையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் பிராந்திய குற்றவியல் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச FCID இல் முன்னிலையாகவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.…

73 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் : யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்ததான முகாமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட 157 பாடசாலைகள் நாளை 25 ம் திகதி மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பூட்டப் படும் என்று…

88 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிப்பு!

நிலவிவரும் காலநிலை காரணமாக ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை ஹட்டன் கொழுப்பு…

87 0 0