உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஷிரந்தி ராஜபக்ச FCID இல் முன்னிலையாகவில்லை!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
69 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் தங்கியிருப்பதால், விசாரணைக்காக முன்னிலையாக வேறு ஒரு திகதியை வழங்குமாறு ஷிரந்தி ராஜபக்ச தரப்பிலிருந்து எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்தின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், இன்று காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் இன்று முன்னிலையாகாத நிலையில், அவரது தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்ட செயலக முத்திரைகளை போலியாகத் தயாரித்து பாரிய மோசடி!

நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பிரதேசவாசிகளிடம் பணம்…

67 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் : யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்ததான முகாமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும்,…

66 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட 157 பாடசாலைகள் நாளை 25 ம் திகதி மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பூட்டப் படும் என்று…

87 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிப்பு!

நிலவிவரும் காலநிலை காரணமாக ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை ஹட்டன் கொழுப்பு…

85 0 0