ஹட்டனில் கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை
ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட 157 பாடசாலைகள் நாளை 25 ம் திகதி மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பூட்டப் படும் என்று ஹட்டன் வலய பணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையாலும் 24 ம் திகதி பெய்து வரும் கனமழையாலும் போக்குவரத்து மற்றும் அனர்த்தங்கள் பற்றி முன் கூட்டியே இந்த விடுமுறையை வழங்கியுள்ளார்.
ஹட்டன் வலய பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் நாளைய தினம் 25.09.2026 அன்று தங்களது இல்லங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.